பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி சமீபகாலமாக பல்வேறு சம்பவங்களும், விளைவுகளும் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில், அரபு நாடுகளில் அடிமை வேலை செய்யச் சென்று நாடு திரும்பும் இலங்கை முஸ்லிம் பெண்கள் மற்றும் தமிழ்ப்பெண்கள் பல்வேறு துயரங்களுக்கு உற்பட்டு வருகின்றமை கடந்தகால சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.
குறிப்பாக தரமற்ற வெளிநாட்டு சேவையினை வழங்கும் போலி முகவர்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்கள், தூக்கமற்றவளாய், கன்னித்தன்மை அற்றவளாய் கருவைக்கழைத்தவளாய் சொல்லெணா, பல துயரங்கைளை அநுபவித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இன்று இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம் குமரிப்பெண்கள் மற்றும் தமிழ் குமரிப்பெண்கள் நாடுகளில் இருந்து நாடு திரும்பி வருகின்றபோது சிலர் பணமும் தங்கமும் வயிற்றில் குழந்தையும் சம்பாதித்து வீடுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிலர் வைத்தியாலை செல்லாமல் வீ ட்டிலே பிரசவத்தை செய்வித்து வேறுபிரதேசத்துக்கு குழந்தையை தத்துக்கொடுக்கின்றனர . மற்றும் சிலர் குழந்தை பிறக்கும் வரை தூரபிரதேசங்களில் இடம்பெயர்ந்து குழந்தை பெற்றவுடன் கேட்போருக்கு கொடுத்துவிட்டு வீடுவருகின்றனர்.
இன்னும் சிலர் கருவிலேயே குழந்தையை அழித்து விட்டு வருகின்றன . சமீபத்தில் கூட மலையகத்தில் ஒரு பெண் பல வருடங்கள் வெளிநாட்டில் பணிப்புரிந்து எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில்,
பாக்கிஸ்தான் இந்திய நாட்டை சேர்ந்தவர்களுடன் இலங்கை பெண்கள் வேறு வழியின்றி, கட்டாயத்தின் பேரில் தகாத உறவு வைத்துக் கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதனைப்போல குவைத்தில் பல முஸ்லிம் பெண்கள் மற்றும் தமிழ்ப்பெண்கள் வேறு இனத்தவருடன் குடும்பம் நடத்துவதாகவும், பல பெண்கள் ஏமாற்றப்பட்டு , பணத்திற்காக வேறு வழியின்றி பாலியல் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உற்பட்டுள்ளனர்.
பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விடயத்தில் அவதானமாக இருப்பது பொருத்தமானதாக இருக்கும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது. அவ்வாறு அனுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் நம்பகரமான வெளிநாட்டு சேவைகளை வழங்கும் முகவர்களின் ஊடாக அனுப்புவது பொருத்தமானதாக இருக்கும்…