ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் உடனடியாக அரிசி இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் சந்தையில் அரிசி வகைகளின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நெல் ஆலை உரிமையாளாகளிடம் காணப்படும் அரிசியை வெளிப்படைத்தன்மையுடனான ஓர் முறையில் சந்தைக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ அரிசி 60 ரூபாவிற்கு அதிகரிக்காத வகையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
விடுமுறை தினம் என்று (நேற்று பௌர்ணமி) கருதாது உடனடியாக அரிசி விலை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.