ஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி போராட்டமொன்றை நடத்த உள்ளதாக கட்சியின் அழைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிர்க்கட்சியினர் பங்கேற்கும் அரசியல் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கூட்டு எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டிகளை அணிந்து எதிர்ப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களுக்கு அரசாங்கம் பூரண பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதியளித்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அரசாங்க நடுப் பகலில் ஊடக சுதந்திரத்தை மீறுவதாக கூறியுள்ளார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை முற்று முழுதாக மீறிச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு மஹிந்த போபீயா நோய் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.