கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் மந்தகதியில்!

285

kilinochi-stadium-1027

கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதான பணிகள் இன்று வரைக்கும் பூர்த்தி செய்யப்படவில்லை என கவலை தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அரசினால் 220 மில்லியன் ரூபாயில் அமைக்க திட்டமிட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதான பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்ட போது , விளையாட்டு மைதான ஆரம்ப பணிகள் இடம்பெறும்போது இரண்டு ஆண்டுத் திட்டமாகவே , திட்டமிடப்பட்டபோதும் சில தடங்கல்கள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மைதானத்திலேயே 2016ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பணிகள் முடிவுறாதமையினால் அவை கைகூடவில்லை.

இம் மைதானம் 2017ஆம் ஆண்டு முழுமையாக பூர்த்தி செய்ய முயற்சிக்கப்படும். என மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

மேலும் திட்டத்தின்படி 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேற்படி திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE