ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கைக்கு ஸ்ரீ.சு.கட்சி எதிர்ப்பு

265

slfp

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று(13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் தொடர்பிலான உடன்படிக்கையில் சில விடயங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டு என சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

காலி மற்றும் ஒலுவில் துறைமுகங்கள் தொடர்பிலும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி,மாகாணசபை அலுவல்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி ஆகியோர் கொழும்பு நிதி நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீண்ட விளக்கம் அளித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE