இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மலேசிய விஜயத்தின் போது பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளார்.
ஜனாதிபதி 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மலேசியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது உல்லாசப்பயணத்துறை, பயிற்சிகள், ஆராய்ச்சி, பொதுநிர்வாகம், விவசாயம் உட்பட்ட துறைகளில் மலேசிய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளை செய்துக்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.