முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஓர் குழுவுடன் ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

296

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சீன சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஓர் குழுவுடன் ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

இவர் இப்போது அவசரமாக ஜப்பான் சென்றமைக்கு உண்மைக் காரணம் என்னவென்பது தெரியாத நிலையே இன்றும் தொடருகின்றது.

இருந்தபோதும் தற்போது பதவியில் இல்லாத ஒருவருக்கு ஜப்பான் நாட்டில் விஷேட வரவேற்பு, பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

அண்மையில் மஹிந்தவின் சீன விஜயம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து முரண்பட்ட வகையிலேயே அமைந்து போனது.

அதே போலவே இப்போது கோத்தபாய குழுவின் பயணமும் அமையப் போகின்றதா என்ற சந்தேகமும் இருப்பதாக கூறப்படுகின்றது.

என்றாலும் கோத்தபாயவின் ஜப்பான் பயணம் பௌத்த வழிபாட்டு தலங்களை குறிவைத்தே அமைந்துள்ளது. ஜப்பான் நாட்டின் பௌத்த விகாரைகளில் இவர் விஷேட வழிபாடுகளையும் உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

உள்நாட்டில் ஏகப்பட்ட சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வரும் மூத்த ராஜபக்சர்கள் வெளிநாட்டு விஜயங்களுக்கு குறிப்பாக பௌத்தம் சார்ந்த பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.

ஆனாலும் அதையும் தாண்டிய காரணங்கள் இருக்கின்றதா என்பது இப்போதைக்கு வெளிப்படையில்லை.

இதேவேளை இப்போதைய அரசியல் வாழ்வில் பின்னடைவை சந்தித்துள்ள ராஜபக்சர்களின் அடுத்த கட்ட அரசியல் உள்நோக்கங்களுக்காக இவ்வாறான பயணங்கள் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12 625-0-560-320-160-600-053-800-668-160-90-13

 

SHARE