இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. இவர் மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜ்கோட் சென்றுள்ளார். இவர் இருக்கை எண் 30ஏ-விலும், இவரது மேனேஜர் இருக்கை 30சி-யிலும் அமர்ந்துள்ளனர். அப்போது பின்னால் இருந்து யாரோ கையை விட்டு டீனாவை கண்ட இடத்தில் தொட்டுள்ளனர். 31ஏ இருக்கையில் இருந்த ராஜேஷ் தான் டீனாவிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த டீனா பணிப்பெண்ணை அழைத்து புகார் தெரிவிக்க அவரோ இது எல்லாம் நடக்கத் தான் செய்யும் என சாதாரணமாக தெரிவித்துள்ளார். உடனே டீனா கேப்டனை அணுகி புகார் கூறினார்.
அதற்கு கேப்டனோ, விமானம் டேக் ஆப் ஆனால் தான் இது போன்ற சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பு என்று கூறியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது போன்ற கொடுமை நடக்கவில்லை என டீனா கூறியுள்ளார்.