வயாவிழான் பகுதியிலுள்ள மக்களின் மீள்குடியேற்றம் சம்மந்தமாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியுடன் அங்கஜன் இராமநாதன் கலந்தாலோசித்துள்ளார்.
குறித்த சந்திப்பு பலாலி இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் அங்கஜன் இராமநாதனின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வயாவிழான் மீள்குடியேற்றக்குழு பிரதிநிதிகள் நால்வர் கலந்துகொண்டு அங்கஜன் இராமநாதன் ஊடாக மகஜர் ஒன்றை கட்டளைத்தளபதி மகேஸ்சேனநாயக்காவிடம் கையளித்துள்ளனர்.
இது குறித்து கட்டளைத் தளபதி தெரிவிக்கையில்,
வயாவிழானின் சிலபகுதிகள் அங்கஜன் இராமநாதனது வேண்டுகோளுக்கிணங்க தாம் மீள்குடியேற்றம் செய்ததாகவும், எஞ்சிய பகுதிகளை வருகின்ற வருடம் நடுப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதாகவும் யாழ்.கட்டளைத் தளபதி உறுதியளித்துள்ளார்.