பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு

328

false

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், பிரான்ஸ் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருப்பதாக உள்துறை அமைச்சர் புரூணோ லீ ரோக்ஸ் தெரிவத்துள்ளார்.

அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிட்டத்தட்ட 3000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுத்தப்பட இருக்கின்றனர்.

விடுமுறை காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

இத்துடன் பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவரும் விடுமுறை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருக்கிறது,’ என அமைச்சர் புரூணோ லீ ரோக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு தேசிய விடுமுறை கொண்டாட்டங்களின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டனர்.

இத்துடன் கடந்த இரு ஆண்டுகளில் 230க்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதல்களின் மூலம் பலியாகி இருக்கின்றனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் அதிகமான காலகட்டங்களில் கிட்டத்தட்ட 10,000 காவல் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இவர்கள் பிரான்ஸ் நட்டின் முக்கிய தளங்களை பாதுகாத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஜூலை மாதம் வரை அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE