தரம் ஏழு மாணவர்களுக்கான புவியியல் அச்சுப் புத்தகம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் ஏடுகளை கிழிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புத்தக்கங்களின் ஏடுகள் கிழியாது எனவும் மடங்காது எனவும் கூறப்படுகின்றது.
தூசி அழுக்குகள் மற்றும் பேனையில் எழுதினாலும் அவற்றை கழுவி தூய்மைப்படுத்திவிட முடியும் என தெரியவந்துள்ளது.
சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தை பெரும்பாலும் 08 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்.
புவியியல் வரைபடங்களுக்கு தெளிவான வர்ணங்கள் தெளிவான அச்சுகள் மிகவும் முக்கியமானவை என்பதனால் இவ்வாறு புதிய வகை புத்தகம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தரம் 07இல் கற்கும் மாணவ மாணவியருக்கு இந்த பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது என குறிப்பிடத்தக்கது