நாட்டில் டெங்கு நோய் தொற்று காரணமாக 47,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் டெங்கு நோய் பிரிவின் ஆய்வுக்கமைய குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கடந்த வருடம் டெங்கு நேயாளர்களின் எண்ணிக்கை 29,777 பேராக காணப்பட்ட நிலையில் இவ்வருடம் 47,834 பேராக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவளம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் டெங்கு தொற்றினால் இவ்வருடம் மாத்திரம் 77 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களே டெங்கு நோய்க்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் டெங்கு நோய் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.