ஏமாற்றிய காதலி…மொட்டை அடித்து விட்ட காதலன்: பரபரப்பு வீடியோ

231

625-132-560-350-160-300-053-800-238-160-90

பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காதலி மற்றொரு நபருடன் சேர்ந்து தன்னை ஏமாற்றி வந்தது காதலனுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தன்னை ஏமாற்றிய குற்றத்திற்காக காதலிக்கு மொட்டை அடித்து காதலன் அதிரடி தண்டனை வழங்கியுள்ளார்.

மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், நபர் ஒருவர் ஒரு பெண்ணை அமர வைத்து ட்ரிம்மர் மூலம் மொட்டை அடிக்கிறார். பின்னர், இரு புருவங்களையும் எடுக்கிறார்.

இதை சில நபர்கள் சுற்றி நின்று சிரித்துக்கொண்டே வீடியோவாக பதிவு செய்கின்றனர். பிரேசிலில் கடத்தல் குழுக்களில் தவறு செய்பவர்களுக்கு இது போன்ற தண்டனை வழங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE