மோடியின் கல்வி சான்றிதழ்கள் போலி! ஆதாரத்தை வெளியிட்ட கேஜ்ரிவால் ! கேவலப்பட்ட மோடி

226

 

 

பாரத பிரதமரை படிக்காதவர் என்று ஆரம்ப காலத்தில் அவரது அரசியல் எதிரிகள் கலாய்த்தார்கள்.
இதற்கான லீட் எடுத்து கொடுத்தது அத்வானியே என்று அப்போது சொல்லப்பட்டது.
ஆம் நான் படிக்காதவன் தான் அதற்காக எனக்கு எந்த தகுதியும் இல்லை என்றாகிவிடாது. மனிதநேயம் காணாமல் போகாது. தேசப்பற்று இல்லாமல் போகாது என்றெல்லாம் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த கல்வி சான்று தொடர்பாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் அதிகம் சவுண்டு விடுபவர்.
ஏற்கனவே அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் மோடியின் கல்விச் சான்றிதழ்கள் குறித்த விபரங்களை தரக் கோரி மத்திய தகவல் ஆணையத்தை கெஜ்ரிவால் அணுகினார்.
அப்பொழுது மோடியின் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தொடர்பான தகவல்களை கேஜ்ரிவாலுக்குஅளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி கல்லூரிக்கே சென்றதில்லை என்று முதலில் அவரே கூறினார். பின்னர் அவர் குஜராத் மற்றும் டில்லி பல்கலைக்கழங்களில் அஞ்சல் வழியில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டினார்.
ஆனால் அது போலி என்று குற்றசாட்டு எழுந்தது.
ஆகவே சான்றிதழை வெளியிடும்படி கேட்டோம். ஆனால் மோடி அதை வெளியிடவில்லை.
அவருடைய கல்விச்சான்றிதழ்கள் உண்மையானது என்றால் அவற்றை வெளியிட பிரதமர் தயங்குவது ஏன்?
எதற்காக அவற்றை மறைக்கிறார் என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
மோடியுடைய தயக்கமே சந்தேகத்தை கிளப்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
இதனிடையே பா.ஜ.க.அகில இந்திய தலைவர் அமித்ஷா மற்றும் ஜெட்லி ஆகியோர் மோடியின் சான்றிதழ்களை மீடியாக்கள் முன் வெளியிட்டனர்.
அந்த சான்றிதழில் மோடி குஜராத் யுனிவர்சிட்டியின் முதலாம் ஆண்டு எம்.ஏ. சான்றிதழில் அவரது பெயர் மோடி நரேந்திரகுமார் தாமோதரதாஸ் என்றும், இரண்டாம் ஆண்டு சான்றிதழில் மோடி நரேந்திர தாமோதிரதாஸ் எனவும் உள்ளதே என்று ஆம் ஆத்மி கட்சி பிரச்சனையை கிளப்பி விட்டிருக்கிறது.
எனவே மோடியின் கல்வி சான்றிதழ் விவகாரம் தூறல் விட்டாலும் தூவானம் விடாத கதைதான் போங்க.

SHARE