முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இணையத்தள சுதந்திரத்திற்கு தடை

258

 

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் இணையத்தள சுதந்திரம் அதிகரித்துள்ளதாக பீரிடம் ஒப் நெட் 2016 சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

mahintha

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இணையத்தள சுதந்திரத்திற்கு தடையேற்படுத்தப்பட்டதாகவும் அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் பீரிடம் ஒப் நெட் 2015 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், இணையத்தள சுதந்திரம் நடு மட்டத்திலும் தடைகள் குறைந்த நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பீரிடம் ஒப் நெட் 2016 சர்வதேச அறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தை பயன்படுத்துவோருக்கு வரையறைகள் குறைந்த நாடாகவும் இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30 வீதமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்தும் அறிவை கொண்டுள்ளனர்.

இலங்கை சமூக ஊடகங்கள் எந்த தடையுமின்றி செயற்படும் நாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதற்கான சுதந்திரம் இலங்கையில் சிறப்பாக காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

 

SHARE