சிறுவனை 5 வருடமாக சங்கிலியால் கட்டி வைத்த கொடுமை

271

ஏழு வயதான சிறுவனை அவன் பெற்றோரே கடந்த ஐந்து வருடங்களாக சங்கிலியால் கட்டி வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியில் வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது ஏழு வயதாகும் சிறுவனை, சேட்டை மற்றும் குறும்பு செய்வதாக கூறி இரண்டு வயதில் இருந்து சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் மகனுக்கு மனக்கோளாறு உள்ளது. அவனை வெளியில் விட்டால் அதிக சேட்டைகள் செய்து ஏதாவது பிரச்சனையை கொண்டு வருவான் என இப்படி செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

அந்த மாவட்டத்தின் நீதிபதி கூட இப்படி சிறுவனை கொடுமைபடுத்துவது தவறு என அவன் பெற்றோரிடம் சொல்லியும் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து தங்கள் மகனை கால்களை சங்கிலியால் கட்டி வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE