மறைக்கப்பட்ட மர்மம்! மத்தலயில் அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க புலனாய்வு விமானம்

267

1453531671-8272

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க புலனாய்வு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஹம்பாந்தோட்டை, மாகாம்புர துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பல்கள் இரண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது அமெரிக்க கடற்படை உயர் தொழில்நுட்ப மின்னணு மற்றும் பாகங்கள் கொண்ட பொஸிடன் என்ற புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடும் செயின்ட் என்ற விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளது.

கடற்படை இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினருடன் பயிற்சிகள் ஈடுபடுவதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த குறித்த விமானம் ஒரே நேரத்தில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதோடு, பின்னர் அங்கிருந்து சென்றுள்ளது.

மத்தல விமான நிலையத்தில் எந்தவொரு இராணுவ பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவ தரப்பினர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் கப்பல்கள் சாலை, கடற்கொள்ளையர்கள் மற்றும் சீன கப்பல்கள் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபடுவதற்காக இந்த புலனாய்வு விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்திற்கு இதற்கு முன்னர் எந்தவொரு புலனாய்வு விமானங்களும் வருகை தந்ததில்லை.

இந்த அமெரிக்க விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ளது. எனினும் இந்த விமானம் இந்த நாட்டிற்கு வருகைத்தந்தமை மற்றும் அது மத்தலயில் தரையிறங்கியமை தொடர்பிலான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் இரண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் புலனாய்வு மேற்கொள்ளும் அமெரிக்க விமானம் இலங்கையில் தரையிறங்கியமை சட்டவிரோதமான செயல் என உயர்மட்ட பாதுகாப்பு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

SHARE