இளைஞர் பாராளுமன்ற தேர்தல்…! முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முடிவுகள்

246

download

4வது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில், அதன் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் போட்டியிட்ட யோ.நினோசன் 502 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டிருந்த எட்டு வாக்குச்சாவடிகளில், தேர்தல் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேர் போட்டியிட்டனர்.

இந்நநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 502 வாக்குகளை பெற்று துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் போட்யிட்ட யோ.நினோசன் வெற்றிபெற்றுள்ளார்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் – முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்

மொத்த வாக்குகள் – 4276

அளிக்கப்பட்ட வாக்குகள் – 2371

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 28

செல்லுபடியான வாக்குகள் – 2343

வாக்களிப்பு வீதம் – 55.45

SHARE