13 வயது சிறுவன் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

289

சிலி நாட்டில் தம்பதி ஒன்று தங்களின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறி 13 வயது சிறுவனை சித்திரவதை செய்து கொடூரமார கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் குறித்த சமபவம் நடந்துள்ளது. இங்குள்ள தெமுகோ நகரில் குடியிருந்து வரும் தம்பதி ஒன்றை கொலை குற்றத்திற்காக பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த திங்களன்று 13 வயது மதிக்கத்தக்க ஆலன் என்ற சிறுவனை அவனது குடிசையில் இருந்து நாற்காலி ஒன்றில் கைகள் மற்றும் கால்களை கட்டப்பட்ட நிலையில் பொலிசார் கண்டெடுத்தனர்.

குறித்த சிறுவனைன் முகத்தை பிளாஸ்டிக் கூடு ஒன்றால் மறைக்கப்பட்டிருந்தது. சிறுவன் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு அதனால் உயிர் பிரிந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் வாகன நிறுத்தங்களில் விறபனை முகவராக செயல்பட்டு தனது வாழ்க்கையை ஓட்டிவருபவர் என கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதி இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தங்களது 5 வயது மகளை குறித்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட கோபம் காரணம் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் விசாரணை அதிகாரிகள் குறித்த சிறுமியிடம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக எவ்வித ஆதாரங்களையும் காணக்கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சிறுமியை உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE