2016-ல் பெஸ்ட் கம்பேக் யார், யார் தெரியுமா? ஸ்பெஷல்

203

625-372-560-350-160-300-053-800-666-160-90

2016 கிட்டத்தட்ட முடிந்தே விட்டது என்று தான் கூற முடியும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருடம் செம்ம கொண்டாட்டம் தான், ரஜினி, விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தது, இதில் யார், யாருக்கெல்லாம் பெஸ்ட் கம்பேக் என்பதை பார்ப்போம்.

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் கோச்சடையான், லிங்கா என மிகவும் தடுமாறி வந்தார், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நான் தான் நம்பர் 1 என கபாலி மூலம் நிரூபித்தார்.

விஜய்

விஜய் துப்பாக்கி, கத்தி என ஜெட் வேகத்தில் உயர, புலி இவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் சறுக்கல், நஷ்ட ஈடு என பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தெறியின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடி செம்ம கம்பேக் கொடுத்தார்.

சூர்யா

சூர்யாவும் மாஸ், அஞ்சான் என தொடர் தோல்வி படங்களால் மிகவும் மன வேதனையில் இருந்தார், 24 படம் பெரும் வெற்றி இல்லை என்றாலும் சூர்யாவிற்கு தேவையான ஆறுதல் வெற்றி.

யுவன் ஷங்கர் ராஜா

கம்பேக் என்று சொன்னாலே யுவனுக்கு கோபம் வரும், இருந்தாலும் பழைய இசையை யுவனால் கொடுக்க முடியவில்லை என பலரும் தெரிவித்த நிலையில், தர்மதுரை, சென்னை-28 II என இரண்டு அதிரடி ஆல்பங்களை கொடுத்து கலக்கிவிட்டார்.

மாதவன்

மாதவன் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என தமிழக ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், இறுதிச்சுற்று படத்தின் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார்.

சந்தானம்

சந்தானம் காமெடியனாக பல படங்களில் கலக்கினாலும், ஹீரோவாக ஒரு படத்தில் கூட வெற்றி பெறவில்லை, இந்த வருத்தம் அவருக்கே பல வருடங்களாக இருக்க, தில்லுக்கு துட்டு அந்த வருத்தத்தை போக்கி வசூல் மழை பொழிந்தது.

விஜய் ஆண்டனி

சலீம், நான் என தொடர் வெற்றிகளை கொடுத்த விஜய் ஆண்டனிக்கு இந்தியா-பாகிஸ்தான் கொஞ்சம் சறுக்கலை தந்தது, அதனால் சுமாரான வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் பிச்சைக்காரன் மெகா ஹிட் அடித்தது.

தனுஷ்

தனுஷுன் தங்கமகன், தொடரி என தோல்விப்படங்களாக கொடுக்க, கொடியின் வெற்றி தனுஷின் மார்க்கெட்டை கொஞ்சம் உயர்த்தியது.

விக்ரம்

ஐ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த விக்ரம் அடுத்து 10 எண்றதுக்குள்ள என்ற படுதோல்வி படத்தை கொடுத்தார், இதை தொடர்ந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இருமுகனாக மாறி இந்த வருடம் கலக்கிவிட்டார்.

சிம்பு

சிம்பு கடைசியாக எப்போது ஹிட் கொடுத்தார் என்றால் பாகுபலி காலத்திற்கு செல்ல வேண்டும், அந்த அளவிற்கு தன் திரைத்துறையில் மார்க்கெட் சரிந்து இருக்க, அச்சம் என்பது மடமையடா வெற்றியின் உச்சிக்கே இவரை கொண்டு சென்றுவிட்டது.

வெங்கட் பிரபு

ப்ரியாணி, மாஸ் என தொடர் தோல்வி, வெங்கட் பிரபுவிற்கு கடைசி வரை மங்காத்தா என பலரும் கிண்டல் செய்ய, அவர் ஏரியாவிலேயே ஒரு நூலை பிடித்து சென்னை-28 IIவில் களம் இறங்கி அசத்தி விட்டார், ரசிகர்களிடம் இந்த படம் எத்தனை வரவேற்பை பெற்றுள்ளது என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இதுமட்டுமின்றி நீண்ட வருடங்களாக வடிவேலு எப்போது கம்பேக் ஆவார் என காத்திருந்த நிலையில் கத்திச்சண்டை இந்த வாரம் வரும் நிலையில் இவரின் கம்பேக் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், உங்களுக்கு தெரிந்து கம்பேக் ஆன பிரபலங்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

SHARE