தற்போது உள்ள காலக்கட்டங்களில் பெரும்பாலனோர் அசைவ உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். எந்த ஒரு உணவுமே அளவாய் எடுத்துக் கொண்டால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அதுவே அதிகமாகிவிட்டால் நம் உடலில் என்ன மாற்றம் நிகழும், அதனால் என்னவெல்லாம் உபாதைகள் ஏற்படும் தெரியுமா?…
அதில் தற்போது அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் கெடுதல்களைப் பார்ப்போம். அசைவ உணவுகள் பல வழிகளில் மனிதனுக்குக் கெடுதல் செய்கிறது.
* அசைவ உணவுகளைச் சாப்பிடும் போது நம் குடலானது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும். அசைவ உணவு நம் குடலில் செரிமானமாகாத போது, அவை புளித்துப் பல கிருமிகளை உண்டாக்கும். இதனால் உடல் உபாதைகள் ஏற்படும். இவை பல நோய்களை உண்டாக்கும். ஆனால் மனிதக்குடல் நீளமாய் இருப்பதால் கழிவுப் பொருட்கள் எளிதில் வெளியாகாமல் நீண்ட நேரம் குடலில் தங்கி நச்சுக் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது. இவை ரத்தத்தில் கலந்து பல நோய்களைத் தோற்றுவிக்கிறது.
* அசைவ உணவில் கொடிய புளிப்பு நஞ்சு கலந்துள்ளது. இதனால் மார்பு வலி, வயிற்று வலி, நீரிழிவு ஆகியவை உண்டாகின்றன.
* சில நேரங்களில் இறந்த விலங்கின் கறியை உண்ணுவதால் விசக்கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் உள்ளது.
* இரண்டு, மூன்று நாட்கள் கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சேர வாய்ப்புள்ளது.
* அசைவ உணவு உண்பதால் இயற்கையான மன உணர்வுகள் மாறுகின்றன. குறிப்பாக நல்ல உணர்வுகள் குறையத் தொடங்கும்.