உங்கள் காதருகில் இப்படி இருக்கிறதா? பயப்படாதீங்க…

191

மனிதனின் முக்கிய உடல் உறுப்பாக இருப்பது காது ஆகும். இது உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பாகும். எல்லா மனிதர்களுக்குமே காதில் ஓட்டை இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் சிலருக்கு காதின் வெளிபுறத்தின் வலது பக்கத்தில் சிறிய அளவிலான ஓட்டை இருப்பதை கவனித்துள்ளீர்களா?.

நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களில் சிலருக்காவது இப்படி இருக்கும். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா மக்கள் தொகையில் 1 சதவீத மக்களுக்கும், ஆசிய மக்களில் 5லிருந்து 9 சதவீத மக்களுக்கு இப்படி காதின் வெளியில் சிறிய அளவிலான ஓட்டை இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

ஆப்பிரிக்கா மக்களில் 10 சதவீதம் பேருக்கும் இப்படி இருக்குமாம். இப்படி இருப்பவர்கள் பயப்படத்தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இது காது குழி சம்மந்தமான preauricular sinus எனப்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் மேலும் கூறியுதாவது, மரபு பரிமாணம் மூலமாக கூட இப்படி ஏற்பட வாய்ப்புள்ளது. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது போல, மீன்களிலிருந்து வந்த மனிதர்களுக்கு இப்படி காதுகளின் அருகே ஓட்டை இருக்க வாய்ப்புள்ளதாக தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காதின் அருகில் இருக்கும் சிறிய ஓட்டையில் எந்த விதமான தோடுகள் போட கூடாது என்பது முக்கிய விடயமாகும்.

– See more at: http://www.manithan.com/news/20161220123617#sthash.ft6gi1VA.dpuf

SHARE