ஸ்லிம்மாவதற்கு நடிகர் ஆரியா கூறும் சூப்பரான இரகசியம்!

301

நடிகர் சந்தானம் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக ஆவதற்கு, நடிகர் ஆரியாவிடம் டிப்ஸ் கேட்டுள்ளார்.

அதற்கு நடிகர் ஆரியா என்னுடன் வா, நான் ஒரு டீ வாங்கித் தருகிறேன் அதைக் குடித்தால் உடல் எடை விரைவாக குறைந்து, நீ ஸ்லிம் ஆகிவிடலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆரியா மறுநாள் காலையில், ஓர் சைக்கிள் எடுத்துக்கொண்டு சந்தானத்தின் வீட்டிற்கு சென்று, சந்தானத்தையும் அழைத்துக் கொண்டு சந்தானத்தை சைக்கிள் ஓட்ட சொல்லி, பின்னே அமர்ந்து சென்றிருக்கிறார் ஆர்யா.

மகாபலிபுரத்தில் இருக்கும் ஓர் சாலையோர கடையில், உடல் எடையை குறைக்கும் அந்த அற்புத ஸ்பெஷல் டீ விற்கப்படுகிறது என்று ஆர்யா கூறியதால், தினமும் அந்த ஸ்பெஷல் டீயை குடிப்பதற்காக சந்தானம் சைக்கிளை ஓட்டிச் செல்ல ஆர்யா பின்புறத்தில் அமர்ந்தும் சென்றுள்ளார்கள்.

இப்படியே சில நாட்கள் தொடர்ந்து சென்று அந்த ஸ்பெஷல் டீயை பருகி வர, சந்தானத்தின் உடல் எடையில் நல்ல ஏற்பட்டது.

எனவே ஒரு நாள் சந்தானம் ஆர்யாவிடம், எனக்கு இப்போது உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் தினமும் குடித்து வந்த அந்த டீயில் அப்படி என்ன அற்புதம் உள்ளது என்று கேட்டார்.

அதற்கு ஆர்யா, அந்த டீயில் எந்த விதமான அற்புதமும் இல்லை, தினமும் நீ சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை சைக்கிளில் என்னை பின்புறத்தில் அமர்த்திக் கொண்டு சைக்கிளை மிதிச்சிட்டு வந்தது தான் மிகப் பெரிய அற்புதம் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் ஆரியா, உடல் எடையை விரைவில் குறைக்கும் இரகசியமாக, தினமும் நீண்ட தூரம் சைக்கிள் மிதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

SHARE