நடிகர் சந்தானம் காமெடி நடிகராக சினிமாவில் பிரபலமாகி இன்று ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் நடிகை ரெஜினாவை தேர்ந்தெடுத்தார்கள்.
பின் டாப்ஸியை நடிக்க வைக்க அணுகியபோது அவர் பிசியாக இருப்பதால் மறுத்துவிட்டாராம், சந்தானத்துக்கு இப்படியும் ஒரு ஜோடியா? யார் அவங்க.
இந்நிலையில் தற்போது மராத்திய ஹீரோயின் அதிதியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
இவர் மராத்தி, ஹிந்தி என நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அதிதி படத்தின் கதையை கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம்.
இவரின் குடும்பத்தில் அனைவரும் சினிமா துறையை சார்ந்தவர்கள். இதுவே அவரின் முதல் தமிழ் படம்.