கொழும்பு வாழ் மக்களுக்காக அடுத்த இரண்டு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஒரு பகுதி மக்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்ற இடம்பெற்றது.
இதில் உரையாற்றியபோதே நிதி அமைச்சர் மேற்ண்டவாறு குறிப்பிட்டார்.
‘எனது வீடு’ என்ற எண்ணக்கருவின் அடிக்கடையில் கொழும்பிலுள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய எதிர்வரும் 2 வருடங்களில் கொழும்பிலுள்ள மக்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்து, அவர்களுக்கு வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.