வவுனியாவில் பதிவாளர் அலுவலகம் திறந்து வைப்பு

247

வவுனியாவில் பதிவாளர் அலுவலகம் இன்று(21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தை உள்நாட்டு, அலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்த்தன திறந்து வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட இந்த கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் இந்த மாவட்டத்தின் பிறப்பு, இறப்பு, காணிகள் பதிவு நடவடிக்கைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வில் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

SHARE