இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இர்பான் பதான், 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர்.
தற்போது ரஞ்சி அணியில் பரோடா அணியின் தலைவராக இருக்கும் இர்பான், அவ்வப் போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த பெப்ரவரி மாதம் இவருக்கும், சபா பெய்க் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இவர்களுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இர்பான் பதான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.