பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் எவ்வளவு ஆபத்து உள்ளது தெரியுமா?

245

பிளாஸ்டிக் பாட்டில்களானது, நமது கைகளுக்கு அடக்கமாகவும், மிகவும் அழகான பல வடிவங்களில் கிடைப்பதாலும், நம்மில் பலபேர்கள் அதை தான் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களில், நமது உடல்நலத்தில் பல வகையான கோளாறுகள் மற்றும் நோய்களை ஏற்படுத்தும் தன்மைகள் அதிகமாக இருக்கின்றது.

எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் அருந்துவதால் என்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.

பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
  • பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்ற அனைத்திலும் பைசெப்ஃபீனால் ஏ (bisphenol A, or BPA) என்ற இரசாயனம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • பிளாஸ்டிக் பொருட்களில், தண்ணீர் மற்றும் உணவுகளை அதிகமாக பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் இரசாயனம் நமடு உடம்பில் கலந்து, ஆண்மை குறைவு, புற்றுநோய் மற்றும் இதயத்தின் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் அதிகமாக சேர்க்கப்படும் பைசெப்ஃபீனால் ஏ என்னும் நச்சு பொருட்கள், பெண்களுக்கு கருச்சிதைவுகள், மார்பக புற்று நோய்கள் மற்றும் ஹார்மோன் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர்களில் மிக வேகமாய் பாக்டீரியாக்கள் உருவாக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
SHARE