மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வுகள் நேற்று(20) மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன், அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருள் கிறேஸ் றொபின் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் கரோல் கீதம், நாடகம், நடனங்கள் என்பன நடைபெற்றுள்ளதுடன் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.