ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம்

273

 

தற்போது இலங்கையில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறிப்போனதே ஜனவரி 26ஆம் திகதிக்கு பிறகு ஜனாதிபதி இறந்து விடுவார் என்ற செய்தி.

ஆரம்பத்தில் விமர்சனமாக இருந்த இந்த விடயம் தற்போது அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாகவே மாறிப்போய் விட்டது. இதன் பின்னணியில் மஹிந்த தரப்பு இருக்கலாம் என்ற ஓர் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த சதியை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இது மிக ஆபத்தானதோர் விடயம் என்ற ஓர் எச்சரிக்கையினையும் ஊடக அமைச்சின் செயலாளர் நேற்று விடுத்தார்.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் வாகன சாரதி பொலன்னறுவையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர் தப்பிச் சென்றது கண்காணிப்பு கமரா ஒன்றில் பதிவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் விசாரணைகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இராணுவத் தரப்பு ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகின்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் சீன பிரஜை ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, காணப்படும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் வசித்து வந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

இவர் குறிபார்த்து சுடும், மாப்பியாக்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர். இப்போதைய பிரச்சினைகளின் படி அவருடைய இலக்கு ஜனாதிபதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

மற்றும் ஆட்சியை பிடிப்பதற்காக மஹிந்த தற்போது உச்சகட்ட சதியில் ஈடுபட்டுள்ளார் என்றும் இது தொடர்பில் அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனநாட்டுடன் நெருங்கிய தொடர்பில் மஹிந்த ஈடுபட்டுள்ளார் எனவும் மக்கள் குரல் ஒருங்கிணைப்பாளர் ஊடகங்களிடம் எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதன் படி மஹிந்த தரப்பு இவ்வாறான சதியில் ஈடுபட்டுள்ளதா? அவரின் திடீர் சீனப் பயணத்தின் பின்னணியில் ஜனாதிபதியின் கொலைச் சதி இருக்கின்றதா போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக குழப்பங்களையும் சதிகளையும் உள்ளடக்கிய அரசியலில் அடுத்த மாற்றம் என்ன? இப்போதைய சிக்கல்களையும் அச்சுறுத்தல்களையும் ஜனாதிபதி எப்படி சமாளிக்கப் போகின்றார் என்பது கேள்விக் குறியே.

இதேவேளை அண்மையில் வடக்கு முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோருக்கும் கொலை அச்சுறுத்தல் காணப்பட்டதாக செய்திகள் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE