ஹைதராபாத்: வளைகுடா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் செக்ஸ் இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்குவது, அந்த காலகட்டத்தி்ல் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது விவாகரத்து கொடுத்து விட்டுப் போகும் செயல் சத்தம் போடாமல் அரங்கேறி வருகிறதாம்.
17 வயது சிறுமியின் மூலம் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு தாங்கள் மனைவியாக நடிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

செக்ஸ் டூரிசம்
இந்த கொடுமைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர் செக்ஸ் டூரிசம். ஒரு மாதம், 2 மாதம் என மேற்கண்ட நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் பண மூட்டையுடன் இந்தியா வருகின்றனர். இங்கு அவர்கள் விரும்பும் வயதுடைய பெண்களைக தற்காலிக மனைவிகளாக்கி பணம் பார்க்கின்றனர் இங்குள்ளவர்கள்.
ஹைதராபாத்தில்தான் அதிகம்
இந்த அக்கிரமச் செயல் ஹைதராபத்தில்தான் அதிகமாக நடக்கிறதாம். அதிலும் ஏழைகளான, சிறுபான்மையின பெண்களை குறி வைத்தே இந்த கொடுமை நடக்கிறது.
வறுமையை பயன்படுத்தி
குறிப்பாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இவர்கள் அடையாளம் கண்டு பணத்தாசை காட்டி வலையில் வீழ்த்துகின்றனர். இந்த செயலில் உள்ளூர் ஏஜென்டுளும் கை கோர்த்து செயல்படு்கின்றனர்.
அம்பலப்படுத்திய நவ்ஷீன் தபஸம்
17 வயதான நவ்ஷீன் தபஸம் என்ற சிறுமிதான் இந்த அவல கல்யாணத்தை வெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த மாதம் இவர் ஒரு சூடான் பணக்காரரின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்து தனக்கு நேர்ந்த கதியை வெளியில் சொன்னார்.
நான்கு வார மனைவி
கடந்த மாதம்தான் சூடானைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரருக்கு தற்காலிக மனைவியாக அனுப்பப்பட்டார் இந்த சிறுமி. பெற்றோரே வலியுறுத்தி அனுப்பியுள்ளனர். நான்கு வார காலத்திற்கு மனைவியாக இருப்பதற்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 486 பணம் கொடுத்துள்ளனர்.
44 வயது சூடான் பணக்காரர்
நடந்தது குறித்து போலீஸில் தபஸம் கூறுகையில், என்னை ஒரு ஹோட்டலுக்கு எனது அத்தை அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் போல மேலும் சில சிறுமிகள் இருந்தனர். எங்களை சூடானைச் சேர்ந்த 44 வயதான உஸ்மான் இப்ராகிம் முகம்மது என்பவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு சூடானில் கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனராம்.
கல்யாணம் செய்து வைத்து…கமிஷன் அடித்து..
பின்னர் அந்த சூடான்காரர் என்னைத் தேர்வு செய்தார். இதையடுத்து எனக்கும், அந்த சூடான்காரருக்கும் ஹைதாராபாத்தைச் சேர்ந்த ஒரு காஜி திருமணம் செய்து வைத்தார். எனது அத்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். அதில் ரூ. 25,000 எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை அத்தை எனது வீட்டில் கொடுத்தார். காஜிக்கு ரூ. 5,000 கொடுத்தனர்.
அடுத்த நாள் வீட்டுக்கு வந்தார்
திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் சூடான்காரர் எனது வீட்டுக்கு வந்தார். என்னுடன் உறவுக்கு முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை எனது வீட்டார் மிரட்டினர். பிறகு நான் தப்பி வந்து விட்டேன்.
ஆப்பிரிக்கர்களே அதிகம்
தபஸத்தைப் போல பல சிறுமிகளை இப்படிப் பணத்திற்காக தற்காலிக மனைவிகளாக்கி வருவோர் ஹைதராபாத்தில் அதிகம் உள்ளனராம். மேலும் ஆப்பிரிக்கர்களே பெரும்பாலும் அதிக அளவில் பணத்தைக் கொடுத்து தற்காலிக மனைவிகளைப் பெற்று லீவு முடியும் வரை செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.