சொன்னா நம்பமாட்டீங்க… இதெல்லாம் நம்ம அப்பா, அம்மாவிடம் இருந்து தான் வருகிறதாம்!…

208

அப்பா மாதிரியே பைனும் உயரமா இருக்கான் பாரேன், அந்த பொண்ணு அவங்க அம்மா மாதிரியே குண்டா இருக்காங்களே. இப்படியான வார்த்தைகளை நம்மில் பலரும் கேட்டிருப்போம். பரம்பரை மரபு வழியில் ஒருவருக்கு இருக்கும் சில விடயங்கள் அவர் அடுத்த சந்ததியினருக்கும் இருக்கும் என்கிறது அறிவியல்!.

சரி, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சில விடயங்கள் பெற்றோர் மரபணு ஜீனில் இருந்தால் அது அவர்கள் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்கிறார்கள். எது என்னென்ன?

அதிக கொழுப்பு (Cholesterol)

நாம் சாப்பிடும் உணவு முறைகளை பொருத்தே உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்து.

இது உண்மை தான் என்றாலும் 500 பேரில் ஒருவருக்கு அவர்கள் உணவு கட்டுபாட்டில் இருந்தால் கூட அவர்கள் பெற்றோர் மரபு ஜீன்களில் இந்த கொழுப்பு பிரச்சனை இருந்தால் அது அவர்ககளின் பிளைகளுக்கும் வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தலை வழுக்கை

இப்போது பல ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது தலைமுடி வழுக்கை பிரச்சனை தான். உணவு பழக்கம், சுற்று சூழல் போன்ற விடயங்களால் இது பலருக்கு ஏற்படுகிறது என்றாலும் கூட பலருக்கு தங்கள் தாயின் மரபு வழி உடல் சம்மந்தமாகவே அவர்கள் பிள்ளைகளுக்கு வழுக்கை விழுகிறது.

கல்வி அறிவு

நான் படிக்கிற காலத்துல நல்லா படிச்சேன், என் பையன் நீ, ஏன் சரியா படிக்க மாட்ற என பல அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை பார்த்து சொல்வதை கேள்விபட்டிறீப்பர்கள்.

இது உண்மை தான் பெற்றோர் மரபு ஜீனில் உள்ள கல்வி திறமை நிச்சயம் அவர்கள் பிள்ளைகளுக்கும் இருக்கும். பிள்ளைகள் படிக்க முயற்சித்தால் பெற்றோர் போல திறன் தானாகவே வந்து விடும்.

நீரிழிவு பிரச்சனை

வயதானவர்களுக்கு தான் நீரிழிவு நோய் பிரச்சனை வரும் என அர்த்தமில்லை. தற்போது இளம் வயதினருக்கு கூட அது வரும். இது மரபு வழியாகவும் அல்லது தவறான உணவு முறை பழக்கத்தாலும் வருகிறது.

நிறக்குருடு

சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல் தான் நிறக்குருடு ஆகும்.

சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகளால் இது பலருக்கு ஏற்பட்டாலும், பல ஆண்களுக்கு தன் தாய் வழி ஜீன்களாலும், பெண்களுக்கு தந்தை வழி ஜீன்களாலும் இது ஏற்படுகிறது.

காபி அதிகம் பருகுதல்

பலர் காபி பானத்தை தினம் இத்தனை வேளைக்கு என கணக்கு வைத்து அருந்துவார்கள். இது முழுக்க மரபணு ஜீன்களால் தான், முன்னோர் பழக்கம் அடுத்த சந்ததியினருக்கும் தொற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கார் ஓட்டும் திறன்

ஒருவர் என்ன தான் கார் டிரைவிங் திறமையாக கற்றிருந்தாலும், அவர்கள் மரபணு ஜீனில் அதில் பெரிதாக சோபிக்காதவர்கள் இருந்தால் வேகமாக போவதிலோ, கார் ஓட்டும் போது வேறு ஞாபகங்களுக்கு செல்லுதல் என எதாவது சிறிய தவறாவது நடக்க செய்யும். மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.

பார்வை குறைபாடு

இப்போதெல்லாம் பல சிறுவர்கள் மூக்கு கண்ணாடி அணிந்திருப்பதை நாம் காணலாம். உணவு முறை, தொலைகாட்சியை அருகிலிருந்து பார்ப்பது போன்ற விடயங்களால் இது பலருக்கு ஏற்பட்டாலும், தாய், தந்தை மரபு வழி பிரச்சனையாகவும் இது இருக்க தான் செய்கிறது.

 

SHARE