1990 களில் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ராமராஜன். நடிப்பு, பேச்சு, உடை என தன்னுடைய தனி ஸ்டைல்லால் அனைவரையும் வெகு எளிதில் இருக்கிறது.
கவுண்டமணி, செந்தில் காமெடி என்றால் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தை நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது.
இவர் பிரபல நடிகை நளினியை திருமணம் செய்து பின் சில வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நளினி நாடகங்களில் நடித்து சம்பாதித்து வந்தாலும், ராமராஜன் படங்களின்றி சில காலங்கள் தனியே கஷடப்பட்டார்.
பின் அரசியல் கட்சியில் இணைந்து நட்சத்திர பேச்சாளாராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தார். எதிர்கட்சியினரை பலரையும் வெளுத்து வாங்கிய இவர் தேர்தல் நேரத்தில் பரவலாக பேசப்பட்டார்.
சமீபத்தில் நிகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவால் அவர் மிகவும் வருத்தமானதால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகள் வந்தது.
தற்போது அவரை நளினி தான் கவனித்து வருகிறாராம். மன அமைதி இல்லாததால் இப்போது ராமராஜன் பைபிள் படித்து வருகிறாராம். மேலும் அவர் விரைவில் கிறிஸ்தவ மத கொள்கைகளை பரப்ப போகிறாராம்.
பைபிள் வசனங்கள், பிராத்தனை செய்ய என காமெடி நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு அவருக்கு சொல்லிக்கொடுத்து வருகிறாராம்.
விரைவில் மதுரை தமுக்க மைதானத்தில் நடக்கும் நற்செய்தி கூட்டத்திற்கு தலைமை தாங்கி போதனை செய்ய போகிறார் என்று சொல்லப்படுகிறது.