தானிய வகைகளில் கோதுமைக்கு அடுத்தப் படியாக சிறந்து விளங்குவது ஓட்ஸ்.
ஓட்ஸில் நார்ச்சத்து, கனிமச்சத்து, விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துக் காணப்படுகிறது.
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான முழு சத்துக்களும் ஓட்ஸில் நிறைந்துள்ளதால் இதை தினமும் நமது அன்றாட உணவில் சேர்த்து வந்தால், ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
முக்கியமாக உடல் பருமன் குறித்து கவலைக் கொள்பவர்கள் ஓட்ஸை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
எனவே ஓட்ஸில் ஆரோக்கியமான மற்றும் சுவையான தோசை செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.