முற்றும் திறந்த நிலையில், செக்யூலரிஸ விளிம்பில், எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில், குலத்தொழிலைக் கொண்டு சிறக்கும் ஸ்ருதி!
‘‘கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்’’: மும்பையில், ‘‘கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார் என்று செய்திகள் வந்துள்ளன. எதில் என்ன விசயம் இருக்கிறது, “கதை’ என்று சினிமாவில் இருக்கிறதா என்ன? விபச்சாரி, கிளப் டான்ஸர், பப் டான்ஸார், சேர்ந்து வாழும் வாழ்க்கை, அத்தகைய வாழ்க்கை பலருடன், திருமணம் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, மயக்கும் அழகி, நீச்சல் அழகி, போன்ற கதைகள் இருக்கும் போது, அப்படித்தானே நடிகைகள் நடிப்பார்கள். வேறு மாதிரியாகவா நடிக்க முடியும்? நடிகை சுருதிஹாசனுக்கு பெரிய படங்கள் அமைகின்றன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தீவிரமாக நடிக்கிறார். கவர்ச்சி அஜித் ஜோடியாக நடித்த ‘வேதாளம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார், என்று விவரித்துவிட்டு, “கவர்ச்சியில் தாராளமாக நடிப்பதாக சுருதிஹாசன் மீது விமர்சனங்களும் கிளம்பியுள்ளன”, என்கிறது தினத்தந்தி[1]. “கவர்ச்சியில் தாராளமாக நடிப்பது” என்றால் என்ன இதுவரை, யாரும் தாராளமாக செய்யாததை, ஸ்ருதி செய்து விட்டது போல!
நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது – பரம்பரை தொழிலாக்கும், குலத்தொழிலாக்கும்: ஸ்ருதி, இது (நடிப்பது) குறித்து அவர் கூறியதாவது: “பிரபலமாக இருப்பது மகிழ்ச்சிதரக்கூடியது. அதற்காக நான் நடிகையாகவில்லை. நட்சத்திரஅந்தஸ்தும் சந்தோஷமானதுதான் அதற்காகவும் நடிக்க வரவில்லை. நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது அந்த ஆர்வத்தில் தான்நடிகையானேன்”. எங்களுக்கு தொழில் கவிதை என்பது போல, இவர் “எங்களுக்கு தொழில் நடிப்பு” என்கிறார் போலும், அந்த நடிப்புத் தொழிலில் கவர்ச்சி தேவையானால், கவர்ச்சி இருக்கும். ஆமாம், அவரது தந்தை கமல் நடிகர்; அம்மா சரிகா நடிகை; சகோதடி அக்ஷயா நடிகை; பெரியப்பா சாருஹாஸன் நடிகர்; அவர் மகள் சுஹாஷினி நடிகை; இப்படி நடிக-நடிகைகள் குடும்பமாகவே இருக்கிறது. பரம்பரை தொழிலாக்கும், குலத்தொழிலாக்கும் என்கிறார், நாளைக்கு இதிலும் இடவொதிக்கீடு வேண்டும் என்பார்களோ? நடிப்பது என்றால், எப்படியும் நடிப்பது தானே? கவர்ச்சியாக நடிப்பது கூட நடிப்புதான். அதாவது, அவ்வாறு நடிப்பது தான் கஷ்டம். அப்படியே இருப்பது சுலபம். கிளாமராக அரைகுறை ஆடைகளுடன் நடிப்பது கடினம், அப்படியே இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆஹா, உலகநாயகனின் மகள், என்னமா விளக்கம் கொடுக்கிறார்?
கவர்ச்சியாக நடிப்பது கஷ்டமானது: ஸ்ருதி தொடர்ந்து விளக்கியது, “கவர்ச்சி பிடிக்குமா, குடும்பப் பாங்கான வேடம் பிடிக்குமா என்றுஎன்னிடம் கேட்கின்றனர். இரண்டையும் சமமாகவே பார்க்கிறேன். நடிக்க வந்த பிறகு எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுதான். கவர்ச்சிஎன்பது டூயட் பாடுவது, மரத்தை சுற்றி ஓடுவது என்று சாதாரணமாகநினைக்கிறார்கள். அதுவும் கஷ்டமானதுதான் என்பதை யாரும்உணர்வது இல்லை. கவர்ச்சியாக நடிப்பது எளிதானது அல்ல. அதிலும்ரொம்ப சிரமம் இருக்கிறது[2]. அதை குறைத்து மதிப்பிடவேண்டாம்[3]. கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரி நடிக்க நான்தயார்[4]. கதைக்கு கவர்ச்சி தேவை என்றால் கவர்ச்சியாகவும்நடிப்பேன்”[5], என்று ஒரு பெரிய வியாக்யானத்தையே கொடுத்தது, யோசிக்க வைத்தது. இப்படி சொன்னது அதிர்ச்சியாக இருந்தது என்றும் வெப்துனியா எடுத்துக் காட்டுகிறது[6]. எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில் வந்துவிட்ட ஸ்ருதியின் தத்துவமே அலாதியானது தான்! “கவர்ச்சி… ஸ்ருதியின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்” என்கிறது, அப்படி என்ன அதிர்ச்சியாகி விட்டது என்று தெரியவில்லை. தந்தை செக்யூலரிஸத்தில் ஊறியவர் என்றால், மகள் நடிப்பிலேயே செக்யூலரிஸத்தைக் கதைப்பிடிக்கும் விராங்கனையாக மாறியது தெரிகிறது. வயதானாலோ, மார்க்கெட் இல்லாமல் போனாலோ, கவலையே இல்லை, அரசியல் தான் தஞ்சம், அந்த அளவுக்கு பேச்சு இருக்கிறது!
கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் ஒரு நாயகி – ஸ்ருதி: “இன்றைய தேதியில் கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் ஒரு நாயகி யார் என்றால், அது ஸ்ருதி. சமீபத்தில் வெளிவந்த புலி, வேதாளம் படங்களிலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்திருந்தார். அவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட் இரும்பு இதயம் கொண்டவர்களையே ஒருகணம் உலுக்கிவிடும்”, என்று விளக்கியுள்ளது[7]. தொடர்ந்து, “அப்படி என்ன சொன்னார் ஸ்ருதி…? கதைக்கு தேவையென்றால்கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார் ஸ்ருதி. கதையேஇல்லாத படங்களில் ஸ்ருதியின் கவர்ச்சியை வைத்துதான் பில்லப்செய்கிறார்கள். இதுவே அதிகபட்சம். இதில் கதைக்குதேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று ஸ்டேட்மெண்ட்விடுத்துள்ளார். அப்படியென்றால் இப்போது நடிப்பதை ஸ்ருதிகவர்ச்சியாகவே நினைக்கவில்லையா? என்னம்மா இப்படிபயமுறுத்துறீங்களேம்மா”, என்று விளக்கத்தை முடித்துள்ளது. குத்தாட்டம் போடக் கூடத் தயார் என்று கவர்ச்சியைக் காட்ட வந்த பிறகு, எதையும் காட்டத்தயார் என்ற நிலைதான் வந்து விட்டது.
ஸ்ருதி தெலுங்கில் எல்லையற்ற கவர்ச்சி அதிர்ச்சியில் கமல்..!!: இத்தலைப்பில் ஒரு நடனகாட்சி விடியோ உள்ளது[8]. அப்பாடல் இந்தியில் உள்ளது. பாவம், ஸ்ருதியைப் பார்த்தவுடன் மயங்கி விட்டார் போலும்! அப்பாடலில் வரும் வார்த்தைகளே கேவலமாக, கொச்சையாக இருக்கின்றன. “சேரி பாஷை” கூட கொஞ்சம் நாகரிகமாக இருக்கும், ஆனால், அவ்வார்த்தைகள் ஆவ்வளவு கேடுகெட்டத்தனமாக இருக்கின்றன. அதில் இந்த ஸ்ருதி நடிகையின் ஆட்டம் வேறு[9]. அந்த கால “ஹெலன்” நடனம் போன்றுள்ளது, ஆடை கூட அப்படித்தான் உள்ளது. அதில் அதிர்ச்சியடையும் படி ஒன்றும் இல்லை. தொழிலில் சேர்த்துவிட்ட தந்தை, இதைப்பற்றியெல்லாம் அதிர்ச்சி படுவார் என்பதெல்லாம் போலித்தனமானது. உண்மையிலேயே அந்த அளவுக்கு “ஒழுக்கம்” முதலியவற்றையெல்லாம் கவனித்திருந்தால், இத்தொழிலுக்கே வந்திருக்க முடியாது. இதென்ன தமிழச்சியின் இலக்கணமா, “அச்சம், படம், நாணம், பயிர்ப்பு, கற்பு” என்றெல்லாம் பேசுவதற்கு, அல்லது பட்டிமன்றம் நடத்துவதற்கு? சங்ககாலத்திலா தமிழர்கள் இருக்கிறார்கள், நவீனகாலத்தில் தானே இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா இருந்தால் போதும், என்று திராடவித்துவ ஞானிகள், முனிவர்கள், ரிஷிக்கள் எல்லோரும் 60 வருடங்களுக்கு முன்னரே எடுத்துக் காட்டி விட்டார்கள். எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், சினிமா இருந்தால் போதும்.