இனி ஆந்தை என்றால் அபசகுணம்னு சொல்லாதீங்க… பணமழை கொட்டுமாம்!…

231

ஆந்தையின் அலறல் அபசகுணம் என்பார்கள். இறப்புச் செய்தியை கொண்டு வரும் என்பார்கள். இதுவெல்லாம் பொய். அப்படி எதுவும் சத்தம் கேட்டால் அந்த தகவலை ஒரு கும்பலிடம் நீங்கள் கூறினால் பல லட்சம் தருவார்கள்.

இது தான் உண்மை. அந்த 9 நபர்கள் அடங்கிய கும்பலை கர்நாடக போலீசார் சிமோகா மாவட்டம் சோரப் தாலுக்காவில் கைது செய்துள்ளனர்.

இவர்களை விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆந்தையை 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்கும் இந்த கும்பல் மாயாஜாலத்தில் நம்பிக்கை கொண்ட பணக்காரர்களிடம் விற்கின்றனர். விற்கும் போது அதன் விலை 30 முதல் 40 லட்சம் ரூபாய்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஒருவரின் வீட்டை ஆய்வு செய்த போது அங்கு ஆந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை கைப்பற்றினர். இருதலை மணியன் பாம்பு, தேவாங்கு உள்ளிட்டவற்றையும் இந்த கும்பல் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த கும்பலுக்கு வாடிக்கையாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தீபாவளியன்று ஆந்தைகளை கொன்று லட்சுமி பூஜை நடத்தினால் செல்வம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொட்டும் என்பது சிலரின் நம்பிக்கையாக உள்ளது.

 

SHARE