காது என்பது மனிதனுக்கு ஒலியை உணர வைக்கும் ஒரு முக்கிய உறுப்பாகும், காது சம்மந்தமாக பலருக்கு பல பிரச்சனை ஏற்படலாம்.
அதில் பொதுவான ஒரு பிரச்சனை என்னவென்றால் காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கு!
இப்படி அழுக்கு அதிகம் சேர்வதால் காது அடைப்பு, காது வலி போன்ற தொல்லைகள் ஏற்படும்.
சரி, காதில் உள்ள அழுக்கை எளிதாக வெளியேற்ற ஒரு வழி உள்ளது தெரியுமா?
ஆல்கஹால் கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் வினீகர் (vinegar) கொஞ்சம் சேர்த்து சில சொட்டுகள் காதின் உள்ளே ஊற்றினால் காதின் அழுக்குகள் வெளியேறி விடும்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இந்த மருத்துவத்தை நாமே செய்யகூடாது மருத்துவர்கள் மூலம் செய்து கொள்வது பாதுகாப்பானதாகும்.