தனுஷ் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கமிட்டாகி நடித்து வருகிறார். அவருடைய படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு படம் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் அண்மையில் தான் படக்குழு ஃபஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர்.
இந்நிலையில் படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக 24ம் தேதி இரவு 8.30 மணியளவில் வெளியாக இருக்கிறது. இத்தகவலை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.