சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் அரசுக்கு எதிரான போராளிகள் டீசலை கலந்ததால் அங்கு வாழும் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இருதரப்பினரும் திடீரென்று ரத்து செய்ததால் அலெப்போ நகரை விட்டு வெளியேற முடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.
நெடுநாட்களாக போராளிகள்வசம் சிக்கியிருந்த அலெப்போ நகரையும் அரசுப்படைகள் சமீபத்தில் கைப்பற்றியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த போராளிகள் அந்நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் டீசலை கலந்ததால் அங்கு வாழும் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.