சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு!

270

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகபொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேவழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு இணங்க பொலிஸ்மா அதிபரி பூஜிதஜயசுந்தரவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க,சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு டிசம்பர் 08ம் திகதிஅமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.என்.ஜே.வதிசிங்ஹ, எஸ்.ரத்நாயக்க, சி.ஏ.பிரேமசாந்த,எல்.கே.ஜே.ஜி.எஸ்.பீரிஸ், கே.பி.எம்.குணரத்ன, எல்.எச்.டப்ள்யூ.கே.சில்வாமற்றும் ஏ.எச்.எம்.டப்ள்யூ.சீ.கே அலஹகோன் ஆகியோருக்கு பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE