“அரசியல் யாப்புருவாக்க விடயத்தில் சிவில் சமூகம்காட்டிய அக்கறையினையும், பொறுப்புணர்வினையும்கூட முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பிரதிநிதிகளும்வெளிப்படுத்துவதாக இல்லை. இந்த அசமந்தப் போக்குமுஸ்லிம் சமூகத்திற்கு அபாயகரமானது” எனநல்லாட்சிக்கான தேசிய முன்னணி – NFGG யின்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்தெரிவித்தார்.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதியஅரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள்தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில்மேலும் தெரிவித்துள்ளதாவது:
“நமது நாட்டின் எதிர் காலத்தையும், சிறுபான்மைமக்களின் ஒட்டு மொத்த நலன்களையும் நேரடியாகதீர்மானிக்கப் போகின்ற ஒன்றாக புதிய அரசியல்யாப்பு அமையப் போகின்றது. கடந்த 2015ம் ஆண்டுஜனவரி மாதம் மக்கள் வழங்கிய ஆணையானதுவெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றிற்காக வழங்கிய ஆணை கிடையாது. அது இந்நாட்டின் ஆட்சி முறையில்மாற்றம் ஒன்றினை எற்படுத்துவதற்காக வழங்கப்பட்டஆணையாகும். அந்த மாற்றத்திற்காக சிறுபான்மைதமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பங்களிப்புச்செய்திருந்தனர்.
ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெறாவிட்டால் எதிர் காலம்படுமோசமாக அமைந்து விடும் என்ற அபாயத்தைத்தெரிந்து கொண்டேதான் , பெரும் அபாயங்களுக்குமத்தியில் சமூக உணர்வுடனும் நாட்டுப் பற்றுடனும்ஆட்சி முறை மாற்றத்திற்கான அந்தப் பங்களிப்பினைநமது மக்களும் வழங்கினார்கள்.
அனைத்து சமூகங்களினதும் மத கலாசாரதனித்துவங்கள், உரிமைகள் என்பனஉத்தரவாதப்படுத்தப்படுவதோடு , நாட்டின்ஆட்சிமுறைக் கட்டமைப்புக்களில் அனைத்துமக்களும் பங்கேற்றக்கூடிய , ஊழல் மோசடிகள் அற்ற,தேசிய நல்லிணக்கம் கொண்ட ஒரு புதியஇலங்கையைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும்கனவாக இருந்தது. அதனைச் செய்வோம் என்றவாக்குறுதியினை தற்போதைய அரசாங்கமும்வழங்கியிருந்தது. அதற்கேற்ற வகையில்இலங்கைக்கான புதிய யாப்பு உருவாக்கப்படும் என்றவாக்குறுதியும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.அதற்கமைவாகவே தற்போது யாப்புருவாக்கநடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதற்போது இறுதிக்கட்டத்தினை நெருங்கியிருக்கிறது.
யாப்புருவாக்க நடவடிக்கையின் முதற்கட்டமாக பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும்நடவடிக்கைகள் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக, கடந்த ஜனவரிமாதம் பாராளுமன்றம் யாப்பு நிர்ணய சபையாகபாராளுமன்றம் மாற்றப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, புதிய யாப்பில் உள்வாங்க வேண்டியவிடயங்களை தனித்தனியாக கையாள்வதற்கான ஆறுபாராளுமன்ற உப குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தஉப குழுக்கள் தமது கலந்தாலோசனைகளை நிறைவுசெய்து தத்தமது அறிக்கைகளையும் தற்போதுவெளியிட்டிருக்கின்றன. அடுத்தகட்டமாக இந்தஅறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள முன்மொழிவுகள்அனைத்தும் பாராளுமன்றத்தில் விரிவாகவிவாதிக்கப்பட்டு இறுதி தீர்மானம்மேற்கொள்ளப்படவிள்ளது.
ஆரம்பத்தில் பொதுமக்களின் அபிப்பிராயங்கள்உள்வாங்கப்பட்ட சந்தர்ப்பத்தில், முஸ்லிம் சிவில்சமூகப் பிரதிநிதிகளும், அமைப்புக்களும் மிகுந்தஆர்வத்தோடும் அக்கறையோடும் தமதுஅபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும்வழங்கியிருந்தனர். அத்தோடு, சாத்தியமான எல்லாவழிகளிலும் புதிய யாப்பு எவ்வாறு அமைய வேண்டும்என்ற கருத்துக்களையும் பொது தளங்களிலும்ஊடகங்களிலும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தவகையில் யாப்புருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில்முஸ்லிம் சிவில் சமூகம் தனது கடமையினைபொறுப்புடன் செய்திருக்கின்றது.
இவ்விடயத்தில், பாராளுமன்றபிரதிநிதிகளிடமிருந்தும் அவர்கள் சார்ந்தகட்சிகளிடமிருந்தும் நிறையவே எதிர்பார்க்கப்பட்டன. யாப்புருவாக்க விடயத்தில் தமது சமூகம்தொடர்பாகவும் தமது நாடு தொடர்பாகவும்அவர்களின் கடமைகள் ஏராளமாக இருக்கின்றன.ஆனால், சிவில் சமூகம் காட்டிய அக்கறையின்அளவுக்குக் கூட இவர்கள் அக்கறைகாட்டியிருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தத்தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைபாதிக்கக்கூடிய விடயமான தேர்தல் திருத்தவிடயத்தில் மாத்திரம் ஓரளவு அக்கறை காட்டுகின்றஇவர்கள் சமூகத்தினதும் நாட்டினதும் ஏராளமானநலன்களைப் பாதிக்கின்ற ஏனைய விடயங்களில்அக்கறையின்றி மௌனம் காப்பதாகவே தெரிகிறது.
யாப்புருவாக்க ஆலோசனைகளுக்கெனநிர்ணயிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுக்கள்அனைத்திலும் முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கத்துவம்பெற்றிருக்கின்றார்கள். அந்த ஒவ்வொரு குழுக்களும்தத்தமது விடயத் தலைப்புக்களில் ஏராளமானஅமர்வுகளை நடாத்தியிருக்கின்றன. ஏராளமானவிடயங்கள் பேசப்பட்டும் கலந்தாலோசிக்கப்பட்டும்உள்ளன. ஆனால் இந்தக் குழுக்களில் என்னவென்னவிடயங்கள் பேசப்பட்டன என்பது பற்றிஇக்குழுக்களின் அறிக்கை கடந்த நவம்பர் 19ம் திகதிவெளியாகும் வரை நமது சமூகம்அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு குழுக்களிலும்பேசப்படும் விடயங்களை சிவில் சமூகத்தின்பிரதிநிதிகளோடும் புத்திஜீவிகளோடும் இந்தக்குழுக்களில் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்றஉறுப்பினர்கள் தெளிவு படுத்தி ஆலாசித்திருக்கவேண்டும். அவ்வாறு எதுவும் நடை பெறவில்லை. அதுநடந்திருந்தால் சகலரது ஆலோசனைகளையும் பெற்றுசமூகத்தின் தீர்மானங்களை அந்தந்தக் குழுக்களின்முன் மொழிவு அறிக்கைகளில் இணைத்துக்கொண்டிருக்க முடியும். அந்த அருமையானசந்தர்ப்பமும் தவறவிடப்பட்டுள்ளது என்பது பெரும்துரதிஸ்டமாகும்.
மேலும், அதிகாரப் பரவலாக்கல் விடயம்தொடர்பாகவும் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள்காட்டி வரும் மௌனம் ஆச்சர்யம் தருகிறது. சிலமுஸ்லிம் கட்சிகள் வட கிழக்கு இணைப்பு போன்றபாரதூரமான விடயங்களில் மறைமுகமானஒப்புதல்களை வழங்கி விட்டதோ என்கின்ற அச்சமும்இப்போது சமூகத்தில் எழத் தொடங்கியிருக்கிறது.