அரசியல் வறுமையினால் மட்டக்களப்பில் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கயவர்கள்

314

 

இறுதிவரை போராடிய பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமென்று ஜெயலலிதா நிறைவேற்றிய பிரேரணையும், பிரபாகரனின் இறப்புக்கு பின்னர், தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட  பிரேரணைகள் என தற்போது தமிழ் நாட்டு சட்ட மன்றத்தில் இரண்டு பிரேரணைகளும் உண்டு.

2002இல் நோர்வேயின்   மத்தியஸ்த்துடனான சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதுதான், அந்த நிகழ்சி நிரலை குழப்பும் வகையில் ஜெயலலிதா மேற்படி பிரேரணையை கொண்டுவந்திருந்தார்.

மேலும் 1991இல் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்துமாறு மத்திய அரசிற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தவரும் இதே ஜெயலலிதான்.

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கல்லடி,உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவர் வே.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முரசொலிமாறன்,மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் அடிகளார் ஆகியோர் ஆன்மீக அதிதியாக கலந்துசிறப்பித்தனர்.
இதன்போது மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலியை தொடர்ந்து அதிதிகளின் நினைவுரைகளும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

SHARE