இளைய தளபதியுடன் மூன்று ஹீரோயின்கள்! விஜய் 61 ஸ்பெஷல்

227

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பைரவா படம் பொங்கல் ரிலீஸ்க்காக தயாராகிவருகிறது. அடுத்த படமான விஜய் 61 க்காக இப்போததே இவர் தயாராகி வருகிறார். அட்லீ இயக்கப்போகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

மேலும் இப்படம் மூன்று ஹீரோயின்களை மைய்யப்படுத்திய கதையாம். இதனால் இதில் சமந்தா, காஜல் அகர்வால் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இதில் காஜல் துப்பாக்கி, ஜில்லா படத்திலும், சமந்தா கத்தி, தெறி படத்திலும் ஜோடியாக விஜயுடன் நடித்திருந்தார்கள்.

ஏற்கனவே குஷி படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த ஜோதிகா இதில் நடித்தால் இவர்கள் அனைவருமே விஜயுடன் இரண்டு படங்களில் நடித்தவர்கள் என்னும் சிறப்பு பெறுகிறது.

விஜய், ஜோதிகா ஜோடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் ஜோ இந்த வாய்ப்பை மறுக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE