நாணயத்தாள்களில் மிருகக் கொழுப்புகளா? அதிர்ச்சியில் பிரித்தானிய இந்துக்கள்!

242

பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள புதிய 5 பவுண்ட் நாணயங்களில் மிருக கொழுப்பு தடவப்பட்டுள்ளதால் அவற்றை நன்கொடையாக பெற இந்து கோவில் நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.

குறிப்பாக நாணயங்கள் மீதான கொழுப்பு படிமத்தை அகற்ற வேண்டும் என்று கோரி 50 ஆயிரத்திற்கும் அதிகமான இந்துக்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி, மனு அளித்துள்ளனர்.

bank of england என்ற வங்கியானது அண்மையில் புதிய 5 பவுண்ட் நாணயத்தாளினை வெளியிட்டது. குறித்த நாணயம் மீது மிருகக் கொழுப்பு தடவப்பட்டுள்ளதாக தற்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் லீசெஸ்டரில் உள்ள ஸ்ரீ சனாதன் மந்திர் நிர்வாகம், மிருக கொழுப்பு தடவப்பட்டுள்ளதால், 5 பவுண்ட் நாணயங்களை காணிக்கையாக செலுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் குறித்த ஆலய நிர்வாகம் கருத்து தெரிவிக்கும் போது

bank of england ன் நடவடிக்கையினால் பிரித்தானிய வாழ் இந்துக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அது மட்டுமன்றி இந்து மத அமைப்புகளும் கடும் அதிருப்தியில் உள்ளன.

எனவே கூடிய விரைவில் பிரித்தானிய அரசு நாணயத்திலுள்ள கொழுபு்பு படிமத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நாணயத்தாள்கள் மீது மிருக கொழுப்பு தடவப்பட்டுள்ளதை குறித்த வங்கியும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE