4200 வருடங்கள் பழமையான பார்வோன் கல்லறை கண்டுபிடிப்பு

240

இதுவரை அடையாளம் காணப்படாத பார்வோன் அரசருக்கு சொந்தமான புதிய கல்லறை ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Birmingham பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதலில் 6 அடி உயரத்திலான மதிலினால் சுற்றப்பட்டுள்ளதாக இந்த கல்லறை கிடைத்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த கல்லறை 4200 ஆண்டு பழைமையான காலப்பகுதிக்கு உட்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த கல்லறையினுள் பார்வோன் அரசர் ஒருவரின் உடல் ஒன்று நிச்சியமாக காணப்படும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் தொல்பொருள் நடவடிக்கைக்காக உரிய காலம் வர வேண்டும் எனவும், அதனை தோண்டும் நடவடிக்கையினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தற்போது வரையில் குறித்த கல்லறையை சுற்றி உள்ள கல்வெட்டுகளை மாத்திரமே ஆய்வு செய்ய முடிந்துள்ளன.

இந்த ஆய்வின் இறுதி வரையில் குறித்த கல்லறைக்கான உரிமையாளர் தொடர்பில் தகவல் வெளியிட முடியாதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE