இனி வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம்…! பிரித்தானியவில் புதிய நடைமுறை

238

பிரித்தானியாவில் சில இடங்களில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது அடையாள அட்டைகளை சமர்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இடம்பெரும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது.

பிரித்தானியாவில் பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் சமூக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்து தேர்தல் முறைகேடுகளை அந்நாட்டு அதிகாரிகள் சிலர் கண்டுகொள்வதில்லை.

அந்நாட்டு அரசு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடையாள அட்டை சமர்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு லண்டனில் டவர் ஹேம்லட்சில் இடம்பெற்ற தேர்தலின் போது முறைகேடுகள், மிரட்டல்கள் இடம்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு தேர்தல் நடைமுறைகள் குறித்த விரிவான விசாரணைக்கு வழிவகுத்தது. இதனை மேற்கொண்ட சமூகங்களுக்கான முன்னாள் செயலாளர் ஹெரிக் பிக்கல்ஸ் வாக்குசாவடிகளில் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரை வழங்கினார்.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய அரசு வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது அடையாள அட்டைகளை சமர்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது.

SHARE