தலைவர் பிரபாகரனின் கால்தூசிக்கு பெறுமதி அற்றவர் அமைச்சர் சுவாமிநாதன்

253

பிரபாகரன் சிறந்த தலைவருமில்லை அத்துடன் ஓர் நல்ல மனிதரும் இல்லை.இவ்வாறு துணிச்சலுடன் பேசியுள்ளார் தமிழ் அமைச்சர் சுவாமிநாதன்.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக இருக்கும் சுவாமிநாதன் தேசிய பட்டியல் மூலமே பாராளுமன்றம் சென்றவர்.

பின்னர் தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களின் அனுசரணையுடன் அமைச்சரானார்.

இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்ற விடுதலை புலிகளின் தலைவரை குறித்து வெளியிட்டிருக்கும் கருத்தினை பல சிங்கள ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

கடந்த இரண்டு தினங்களிற்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான கூட்டமொன்றில் உரையாற்றியிருந்த விஜயகலா, பிரபாகரன் ஓர் சிறந்த மனிதர் என தெரிவித்திருந்தார்.

தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர் இவ்வாறு பேச முடியாதென வாசகர்களும் ஆக்ரோசமாக விமர்சனம் செய்திருந்தனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன்,

இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை எனவும் பிரபாகரன் ஓர் சிறந்த மனிதரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE