உயிரோடு இருக்கும் போதே சவப்பெட்டியில் படுத்து கல்லறை அமைக்கும் மனிதர்கள்!

221

பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதி!

ஆனால் அந்த இறப்பானது இயற்கையாக மனிதனை தேடி வர வேண்டும், நாமாக அதை தேடி போகக்கூடாது.

தென் கொரிய நாட்டில் பணப்பிரச்சனை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதை தடுக்க அந்நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் Kim Ki-Ho போலியான மரண சடங்கு (Fake Funeral) என்னும் ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்.

அதன்ப்படி இதில் பங்கேற்பவர்கள், இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் மரத்தால் ஆன சவப்பெட்டியின் உள்ளே 30 நிமிடங்கள் படுத்து கொள்ள வேண்டும்.

மேலும், இதில் பங்கேற்பவர்கள் கல்லறை மீது தங்கள் புகைப்படத்துடன் எழுத ஏதாவது வாசகத்தை எழுதி தர வேண்டும். தங்கள் யார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு கூற எதாவது உருக்கமாக விடயத்தையும் எழுத வேண்டும்.

இப்படி செய்வதால் மரணம் எவ்வளவு கொடுமையானது, அதை நோக்கி நாம் செல்லவே கூடாது மற்றும் வாழ்க்கை வாழ்வதற்கே, சாவதற்க்கல்ல போன்ற எண்ணங்கள் இதை செய்பவர்கள் மனதில் உருவாகும் என இந்த நிகழ்வை நடத்தும் ஏற்ப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

SHARE