பிரித்தானியாவை அழிக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம்பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

190

பிரித்தானிய நாட்டில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்தி மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு திட்டம் தீட்டி வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய நாட்டின் தேசிய பாதுகாப்பு துறை அமைச்சரான பென் வாலஸ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, பிரித்தானிய நாட்டில் மிக மோசமான ரசாயன ஆயுத தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு திட்டம் தீட்டி வருகிறது.

இது தான் தற்போது பிரித்தானிய மக்களுக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஏற்கனவே ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது.

பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இரக்கம் காட்டுவதில்லை. எனவே, இதுபோன்ற தாக்குதலை பிரித்தானிய நாட்டிலும் அவர்கள் ஏற்படுத்தலாம் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கி தலைநகரான இஸ்தான்பூலில் புத்தாண்டு தினத்தன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 39 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE