மல்லாவியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பாராளுமன்ற நிதியில் அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலை தொடர்பில் நேற்றுமுதல் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.
இச் சிலை திறப்பு வைபவத்தின்போது இதனைக் குழப்பும் நோக்கில் மதுபோதையில் வந்த நபரொருவர் அமைக்கப்பட்ட பண்ணடாரவன்னியன் சிலையில் மன்னன் வைத்திருக்கும் வாள் தொடர்பிலும் அவரது கண்கள் ஐயனாரின் கண்கள் போன்றும் அகன்றிருப்பதோடு அவர் வைத்திருக்கும் கேடயம் பின்நோக்கிய திசையிலும் காணப்படுவதாகவும் இச்சிலையில் பல்வேறு தவறுகள் இருப்பதாக உளறினார். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என அவரின் கதையாச்சு. இவருக்கு மது வாங்கிக்கொடுத்தது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.
சிலை திறக்க சென்ற சிவமோகனிடம் வாக்குவாதம்(காணொளி)
அந்த எதிர்ப்புக்களை கருத்தில் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர் திட்டமிட்டபடி திறந்துவைக்க முற்பட்டபோது ஒரு இளைஞர் இத்தகைய எதிர்ப்புக்கள் உள்ளது நீங்கள் இந்த சிலை திறப்பதற்கும் எதிர்ப்புள்ளது எனவே காரணத்தை கூறி அதனை திறக்குமாறு கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த சிவமோகன் தான் தனது தலைமைஉரையில் அவற்றை தெரிவிப்பதாக சொல்லி இளைஞர்களை சமாதானப்படுத்தி ஒருவாறு நிகழ்வை நடாத்தி முடித்ததோடு அதற்கான தன்னிலை விளக்கத்தையும் சிவமோகன் வழங்கியிருந்தார்.








